
* சங்க தமிழே வருக !
முத்தமிழ் சுவையும் தருக !
* சேர, சோழ, பாண்டியனிடம் நீ வளர்ந்தாய் !
இயல், இசை, நாடகத்தை நீ வளர்த்தாய் !
* கம்பன், வள்ளுவனிடம் தமிழ் பயின்றாய் !
கபிலரையும், நக்கீரரையும் நீ கொடுத்தாய் !
* அகம், புறம் நானூறு கேட்டு மகிழ்ந்தாய் !
அருட்சுவையும், பொருட்சுவையும் எமக்கு அளித்தாய் !
* ஐந்திணைகளில் வாழும் தமிழ் அன்னையே !
ஐம்பெருங்காப்பியங்களில் உலா வரும் தமிழ்த் தாயே !
* மொழிகளில் சிறந்தது தாய்மொழி !
செம்மொழிகளில் சிறந்தது தமிழ் மொழி !
* தமிழ் பயின்ற அயல் நாட்டு அறிஞன் வீரமாமுனிவன் ஆனான் !
* தென் குமரியில் கம்பீரமாக வீற்றிருக்கும் வள்ளுவன் சிலை, தமிழரின் சாதனை அன்றோ !
* தமிழையும், தமிழரையும் வாழ வைத்தாய் !
தமிழ் அறிஞர்களின் நூல்களை சேகரித்தாய் !
* பல(ழ) மொழி கற்ற புலவருக்கு பரிசளித்தாய் !
பாவையே, எமக்கு எதை அளிப்பாய் !
* பாமாலை சூடியிருக்கும் தமிழ் அன்னையே !
எமக்கு, சங்க தமிழ் அனைத்தும் தா !
- பொ. த. தங்கமணி










0 comments:
Post a Comment