
தேவையான பொருட்கள்: இட்லி - 10சின்ன வெங்காயம் - 5பச்சை மிளகாய் - 1கேரட் - 50 கிராம்முட்டைக்கோஸ் - 50 கிராம் பச்சைப்பட்டாணி - 50 கிராம்எண்ணை - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசெய்முறை:பச்சைப்பட்டாணி மற்றும் முட்டைக்கோசை வேகவைத்துக் கொள்ளவும்¢. வாணலியில் எண்ணை ஊற்றி, அத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பிறகு வேகவைத்த காய்கறிகளையும் போட்டு வதக்கவும். வதக்கிய கலவையுடன் உதிர்¢த்து வைத்திற்கும் இட்லியைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். இதனை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கவும். பழங்காலத்தில் உள்ள Ôஉருண்டைச்சோறைÕ ஞாபகப்படுத்தும் இது, பார்ப்பதற்கு வண்ணமயமாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.










0 comments:
Post a Comment