Monday, August 16, 2010

சென்னா மசாலா

0 comments

தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை 1 கப்
சின்ன வெங்காயம் 3
தக்காளி (நன்கு பழுத்தது) 2
இஞ்சி 1 சிறிய துண்டு
பூண்டு 8 பல்
புளி எலுமிச்சை அளவு
வெல்லம் 1 தேக் கரண்டி
டால்டா 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
ஏலக்காய் 1
லவங்கம் 1
பட்டை 1
நெய் தாளிக்க
உப்பு தேவையான அளவு
நன்கு அரிந்த கொத்தமல்லித்தழை அழகுபடுத்த


செய்முறை:


நன்கு ஊறிய கொண்டைக்கடலையை குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஏலம், லவங்கம், பட்டை எல்லாவற்றையும் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளிகளை வெந்நீரில் போட்டு தோலை உரித்துத் தனியே அரைத்துக் கொள்ளவும்.

சூடான வாணலியில் நெய்யை விட்டு, நெய் இளகியவுடன் சிறிதளவு சீரகத்தைப் போடவும். சீரகம் வெடிக்கும் போது அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைக் கொட்டி நெய் தனியே பிரியும் வரை கிளறவும்.

பிறகு அரைத்த தக்காளியைச் சேர்க்கவும். உப்பு, மிளகாய்த்தூள், புளி, வேகவைத்த கொண்டைக்கடலையை இதனுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

இக்கலவை ஓரளவு கெட்டியானவுடன் அரிந்த கொத்தமல்லித்தழைகளையும், பச்சை மிளகாய்களையும் தூவி பரிமாறவும். தேவைப்பட்டால் இதனுடன் வெங்காயம் மற்றும் எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம்.


ஊட்டச்சத்து விவரங்கள்:


வெள்ளை கொண்டைக்கடலை புரதம் அதிகம் நிறைந்தது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். 4 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேரச் சிற்றுண்டியாகவோ அல்லது இரவு சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடவோ கொடுக்கலாம்.

0 comments:

Post a Comment